Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி -காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

புபனேஸ்வர் ; இந்தியாவில் நடைபெற்றும் வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் லீக் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மோதிய இந்தியா 4-5 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.

India Thrashed Poland by 8-2 in Junior World cup Hockey

இதே போன்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி போலாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக இந்திய வீரர் சஞ்சய் மாற்றினார்.இதே போன்று 8வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனை கோலாக ஹூண்டால் மாற்றினார்.

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் இந்திய வீரர் சுதீப் கோல் அடிக்க ஸ்கோர் 3-0 என்ற கணக்கில் உயர்ந்தது. 34வது நிமிடத்தில் இந்திய வீரர் உத்தம் ஒரு கோலும், 38வது நிமிடத்தில் திவாரி ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 5-0 என்ற நிலையில் உயர்ந்தது. 40வது நிமிடத்தில் சுதீப் மீண்டும் கோல் அடித்தார்.

போட்டியின் கடைசி பகுதியில் போலாந்து வீரர்கள் போராடி 2 கோல்கள் அடித்தனர். மீண்டும் இந்திய அணி வீரர்கள் கடைசி கட்டத்தில் 2 கோல்கள் விளாச, போட்டி முடிவில் இந்திய அணி 8-2என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, அதில் கடந்த முறை இறுதிப் போட்டி வரை வந்த பெல்ஜியமை எதிர்கொள்கிறது.

Story first published: Sunday, November 28, 2021, 12:00 [IST]
Other articles published on Nov 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+