Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பங்காளிங்களா ரெடியா?… காமன்வெல்த் ஹாக்கியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

டெல்லி: அடுத்த ஆண்டு நடக்க உள்ள காமன்வெல்த் போட்டியின் ஹாக்கி பிரிவில் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா சந்திக்க உள்ளது.

11வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 முதல் 14 வரை நடக்க உள்ளது. இதில் ஹாக்கி பிரிவுக்கான கால அட்டவணையை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

india to face pakistan

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஹாக்கியில், பி பிரிவில் கடந்த முறை வெள்ளி வென்ற இந்தியா, பாகிஸ்தான், கடந்த முறை வெண்கலம் வென்ற இங்கிலாந்து, மலேசியா, வேல்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியா, ஏப்ரல் 7ல் நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, ஏப்ரல் 8ல் வேல்ஸ், 10ல் மலேசியா, 11ல் இங்கிலாந்து அணிகளுடன் மோதுகிறது.

மகளிர் பிரிவில், ஆசிய சாம்பியனான இந்தியா, ஏ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் அணிகளுடன் உள்ளது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, கானா ஆகியவை பி பிரிவில் உள்ளன.

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஏப்ரல் 5ல் தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்கிறது. ஏப்ரல் 6ல் மலேசியா,8ல் இங்கிலாந்து, 10ல் தென்னாப்பிரிக்காவுடன் மோத உள்ளது.

Story first published: Wednesday, November 29, 2017, 18:40 [IST]
Other articles published on Nov 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+