Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - சீனா ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி.. நேரம், சேனல், ஸ்ட்ரீமிங் விவரம்

ஷாங்காய்: ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன இதுவரை நான்கு முறை ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா வென்றுள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் தென் கொரியா அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் சீனா, பாகிஸ்தான் அணியை ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி இருந்தது. இதை அடுத்து இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

india vs china hockey

இதற்கு முன் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதிய போட்டிகளில் சீனா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2013 ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் சீனா 2 - 0 என இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. மற்ற எந்த போட்டிகளிலும் சீனா, இந்தியாவை வீழ்த்தியதில்லை. தற்போது உள்ள ஃபார்மை வைத்து பார்த்தால் இந்தியா நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் சீனா லீக் சுற்றில் தான் ஆடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு அணிகளை மட்டுமே சீனா வீழ்த்தி இருந்தது. எனினும், அரை இறுதியில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்து ஷூட் அவுட் முறையில் சீனா வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. லீக் சுற்றில் ஐந்து போட்டிகளிலும், அரை இறுதியிலும் இந்தியா வெற்றி பெற்று உள்ளது. மேலும், இதுவரை இந்தியா 6 போட்டிகளில் 25 கோல்களை அடித்து அசத்தி உள்ளது. ஆனால், மொத்தமே ஐந்து கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறது. இந்த அட்டகாசமான ஆட்டம் இறுதிப் போட்டியிலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியா மற்றும் சீனா மோதும் ஆசிய சாம்பியன்ஸ் இறுதிப் போட்டி நடைபெறும் நேரம், தொலைக்காட்சி ஒளிபரப்பு, மொபைல் செயலி மற்றும் இணையதள நேரலை குறித்து பார்க்கலாம்.

இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதும் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி செப்டம்பர் 17 அன்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 என்ற தொலைக்காட்சி சேனலில் நேரலையில் காணலாம். மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் சோனி லிவ் (Sony Liv) செயலி அல்லது இணைய தளத்தில் இந்த இறுதிப் போட்டியை பார்க்கலாம். சோனி லிவ் செயலிக்கு சந்தா செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 17, 2024, 10:02 [IST]
Other articles published on Sep 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+