Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றது.. 2028 ஒலிம்பிக்கிற்கும் நேரடி தகுதி

நகோயா: ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதன் மூலம் கடந்த 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 44 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி பிரிவில் தங்கம் வென்று இந்திய வீராங்கனைகள் புதிய வரலாறு படைத்துள்ளனர்.

India vs China Women Asian Games 2026

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதின. போட்டியின் முதல் கால்பகுதியிலேயே இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி மின்னல் வேகத்தில் அபாரமாக ஒரு பீல்ட் கோல் அடித்து இந்தியாவை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இந்த

ஆரம்பக்கட்ட முன்னிலையை இந்திய வீராங்கனைகள் இறுதி வரை அசாத்திய தடுப்பாட்டத்துடன் பாதுகாத்தனர்.துவக்கத்திலேயே பின்தங்கிய சீன அணி ஆட்டத்தை சமன் செய்ய அடுத்தடுத்து தீவிர தாக்குதல்களை நடத்தியது. கடைசி கால்பகுதியில் தனது கோல்கீப்பரையே வெளியேற்றிவிட்டு, கூடுதல் தாக்குதல் ஆட்டக்காரரை அணியில் சேர்த்து கோல் அடிக்க சீனா தீவிரமாக போராடியது. ஆனால் இந்திய கோல்கீப்பர் சவிதா பூனியா இரும்பு அரணாக நின்று சீனாவின் அனைத்து கோல் முயற்சிகளையும் தடுத்து நிறுத்தினார்.

சலீமா டேட்டே, ருதுஜா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் கடைசி நிமிடங்களில் பந்தை சாதுரியமாக கையாண்டு நேரத்தை கடத்தினர். இறுதி விசிலில் ஆட்டம் 1-0 என முடிந்ததும் ஒட்டுமொத்த மைதானமும் இந்திய வீராங்கனைகளின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மூழ்கியது.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதி

இந்த வரலாற்று வெற்றியின் மூலம், இந்திய மகளிர் ஹாக்கி அணி 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று இரட்டை சாதனையை படைத்துள்ளது. 1982 டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பிறகு 44 ஆண்டுகளாக எட்டாக் கனியாக இருந்த ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Story first published: Friday, October 2, 2026, 18:06 [IST]
Other articles published on Oct 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+