Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி எத்தனை மணிக்கு ஒளிபரப்பு? எந்த சேனலில் பார்க்கலாம்?

டெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தி உள்ளது. இந்தியா நான்கு போட்டிகளில் மொத்தம் 19 கோல் அடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக மூன்று கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு டிரா செய்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் 5 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு அணிகளில் இந்தியாவே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ind vs pak india pakistan

பாகிஸ்தான ஹாக்கி அணி கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. மறுபுறம் இந்தியா உச்சகட்ட ஃபார்மில் உள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சமீபத்தில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில் இந்தப் போட்டி இந்தியாவில் நேரலை செய்யப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய சாம்பியன்ஷிப் ட்ராபி ஹாக்கி போட்டி எத்தனை மணிக்கு நடைபெறும்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஹாக்கி போட்டி செப்டம்பர் 14 அன்று மதியம் 1:15 மணிக்கு துவங்கி நடைபெறும் இந்த போட்டி சீனாவில் உள்ள ஹூலுன்பூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய சாம்பியன்ஷிப் ட்ராபி ஹாக்கி போட்டியை தொலைக்காட்சி மற்றும் மொபைலில் எப்படி பார்ப்பது?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி லீக் போட்டியை காண விரும்புபவர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 (Sony Sports Ten 1, Sony Sports Ten 3) ஆகிய சேனல்களில் நேரலையில் பார்க்கலாம்.

மொபைல் அல்லது இணையதளம் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஹாக்கி போட்டியை பார்க்க விரும்புபவர்கள் சோனிலிவ் (Sony Liv) மொபைல் செயலி மற்றும் சோனி லிவ் இணையதளத்தில் போட்டிகளை பார்க்கலாம். இந்த போட்டியை சோனி லிவ்-இல் பார்க்க வேண்டும் எனில் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 14, 2024, 8:54 [IST]
Other articles published on Sep 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+