Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி உலகக்கோப்பை.. ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம்.. இரு அணிகளுக்கும் நெருக்கடி

டெல்லி: உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில், இந்திய அணி இன்று (புதன்கிழமை) தனது முக்கிய போட்டியாளரான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டம் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது.

இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில், வேல்ஸ் அணியை 3-1 என வென்றது. ஆனால் இங்கிலாந்திடம் 2-4 எனத் தோல்வியடைந்தது. தற்போது 3 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேற நேரிடும். ஆட்டம் டிராவில் முடிந்தால், இந்தியாவின் தகுதி இங்கிலாந்து - வேல்ஸ் போட்டியின் முடிவைச் சார்ந்திருக்கும். இந்தியா தற்போது 0 கோல் வித்தியாசத்தில் உள்ளது.

India vs Pakistan FIH Hockey World Cup 2026 Qualification Scenarios amp amp Pool D Standings

மறுபுறம், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வேல்ஸ் அணியுடன் டிராவும், இங்கிலாந்திடம் 1-4 எனத் தோல்வியும் கண்ட பாகிஸ்தான் 1 புள்ளியுடன் பின்தங்கியுள்ளது. இத்தொடரில் தங்களது வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமெனில், இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை கட்டாயம் வீழ்த்தியே தீர வேண்டும். டிராவோ அல்லது தோல்வியோ அடைந்தால் பாகிஸ்தான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும். பாகிஸ்தான் -3 கோல் வித்தியாசத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இதனால் எஞ்சிய ஒரு இடத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், இன்று நடக்கும் ஆட்டம் ஹாக்கி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, August 19, 2026, 11:03 [IST]
Other articles published on Aug 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+