இந்திய மானத்தை காப்பாற்றியதற்கு இது தான் மரியாதையா?- ஆசிய கோப்பையை வென்ற ஹாக்கி அணி

சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைபற்றியது. ஒரு புறம் கிரிக்கெட் அணி தொடர் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
நாடு திரும்பிய அணிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி அணியினருக்கு தலா ரூ. 25, 000 பரிசுத் தொகை அளி்ப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் அறிவித்தார்.
இந்த பரிசுத் தொகையை வைத்துக் கொண்டு நல்ல ஹாக்கி மட்டை வாங்க முடியுமா இல்லை குடும்பத்தை தான் காப்பாற்ற முடியுமா என்று கூறி அணியினர் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.
இது குறித்து ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பால் சிங் ஜீ நியூஸுக்கு கூறியதாவது,
நாங்கள் பாகி்ஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் கோப்பையை வென்றுள்ளோம். ஆனால் அதற்கேற்ற சன்மானம் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
இந்த சன்மானம் எங்களை ஊக்குவிக்குவதோடு எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட விரும்பவர்களுக்கும் உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.
இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 25, 000 சன்மானம் மத்திய அரசு கொடுத்ததல்ல, ஹாக்கி இந்தியா கொடுத்தது என்று அமைச்சர் அஜய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பணத்தை வைத்துக் கொண்டா கொடுக்க மாட்டேன் என்கிறோம். ஏதோ எங்களால் முடிந்ததைத் தான் கொடுத்தோம் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:50 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications