For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வச்சு செய்த இந்திய அணி.. கடைசி வரை கெத்து காட்டியது எப்படி?

வங்கதேசம்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி பெருமை சேர்த்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த டிச.14ம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

கவாஸ்கர், கபில்தேவ் மோதல் தெரியுமா?? கோலிக்கு ஒரே ஒரு புகைப்படம் மூலம் பாடம் எடுத்த கவாஸ்கர் மகன்..!! கவாஸ்கர், கபில்தேவ் மோதல் தெரியுமா?? கோலிக்கு ஒரே ஒரு புகைப்படம் மூலம் பாடம் எடுத்த கவாஸ்கர் மகன்..!!

ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்ற இந்திய ஆடவர் அணி, இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சருக்கியது. எனினும் அதன்பின்னர் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவிடம் வெற்றிக்கு அருகில் சென்று சமன் செய்தது. அதன்பின்னர் புத்துணர்ச்சியுடன் வங்கதேசத்தை எதிர்கொண்டு 9 - 0 என யாரும் எதிர்பார்க்காத அபார வெற்றியை பெற்றது.

பழிவாங்கும் ஆட்டம்

பழிவாங்கும் ஆட்டம்

இந்நிலையில் இன்று மிக முக்கிய போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொண்டு இந்தியா விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் கால்பகுதியில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன் ப்ரீத் சிங் சாதூர்யமாக பயன்படுத்தினார். இதனால் இந்திய அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.

மீண்ட பாகிஸ்தான்

மீண்ட பாகிஸ்தான்

அதன்பின்னர் இரண்டாம் கால்பகுதியில் பாகிஸ்தான் அணியும் அட்டாக்கிங் கேம்மை தொடங்கியதால், இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் நீண்ட நேரம் பாகிஸ்தான் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 3வது கால்பகுதியின் தொடங்கியவுடனேயே இந்திய அணி கோல் அடித்து 2 - 0 என முன்னிலை பெற்றது.

அபார வெற்றி

அபார வெற்றி

இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க பாகிஸ்தான் திடீரென கோல் அடித்து முன்னேற்றம் கண்டது. ஆனால் அதற்கும் முடிவு கட்டினார் ஹர்மன் ப்ரீத் சிங். கடைசி நேரத்தில் அவர் அடித்த கோலால் இந்தியாவின் வெற்றி உறுதியானது. 3 -1 என அபார வெற்றியையும் பதிவு செய்தது.

Story first published: Friday, December 17, 2021, 17:54 [IST]
Other articles published on Dec 17, 2021
English summary
Indian Hockey team register 3-1 win over arch-rivals Pakistan in Asian Champions Trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X