ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு நடந்த கொடுமை தெரியுமா?
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட ஹாக்கி வீராங்கனைகள் சிலர் ரயிலில் தரையில் அமர வைத்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்களால் முடிந்த அளவுக்கு போராடியும் பதக்கம் வெல்ல முடியாமல் போனது.
இந்நிலையில் நாடு திரும்பிய அணி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஒடிஷா மாநிலத்தில் உள்ள ரூர்கெலாவுக்கு பொகாரோ-ஆலப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றது.

ஹாக்கி வீராங்கனைகளின் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை. இதனால் டிக்கெட் பரிசோதகர் வீராங்கனைகளை ரயிலின் தரையில் அமர்ந்து பயணம் செய்ய வைத்துள்ளார்.
இது குறித்து பன்போஷ் துணை கலெக்டர் ஹிமான்ஷு சேகர் பெஹெரா கூறுகையில்,
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு இருக்கை அளிக்க வேண்டியது ரயில்வே துறையின் கடமை. இந்த சம்பவம் குறித்து நான் ரயில்வே துறைக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications