For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா கடைசி 10 நிமிடத்தில் 4 கோல்.. ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது

சென்னை: சென்னையில் நடைபெற்ற 2025 ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய ஜூனியர் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3-வது இடத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது இந்தியா.

ஒரு கட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய அணி, கடைசி 10 நிமிடங்களில் வெறியாட்டம் ஆடி 4 கோல்களை அடித்து வெற்றியைப் பறித்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Junior Hockey World Cup 2025 India Wins Bronze Medal in Junior Hockey World Cup with Stunning Comeback Against Argentina

வெண்கலப் பதக்கத்துக்கான இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே நிகோலஸ் ரோட்ரிக்ஸ் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோல் அடிக்க, அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. முதல் பாதி முழுவதும் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியிலும் அர்ஜென்டினாவின் கை ஓங்கியிருந்தது. 44-வது நிமிடத்தில் சான்டியாகோ பெர்னாண்டஸ் மற்றொரு கோல் அடிக்க, அர்ஜென்டினா 2-0 என வலுவான நிலைக்குச் சென்றது. இந்தியாவின் பதக்க கனவு கலைந்துவிட்டதோ என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கடைசி 10 நிமிட ஆட்டம்

ஆனால், 4வது கால் பகுதியில் (4th Quarter) ஆட்டம் தலைகீழாக மாறியது. இந்திய ஜூனியர் சிங்கங்கள் சிலிர்த்து எழுந்தன. 49-வது நிமிடத்தில் அங்கித் பால் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி நம்பிக்கையூட்டினார் அப்போது ஸ்கோர் - 1-2 என்று ஆனது.

52-வது நிமிடத்தில் மன்மீத் சிங் மற்றொரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமனானது. மைதானம் அதிர்ந்தது. 57-வது நிமிடத்தில் கடைசி நேரத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை, சாரதா நந்த் திவாரி கோலாக மாற்ற இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. 58-வது நிமிடம்: அன்மோல் எக்கா கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, இந்தியா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கோல்கீப்பர் பிரின்ஸ்தீப் சிங் பல முக்கியமான தடுப்புகளைச் செய்து அணியைக் காத்தார். 2016-ல் தங்கம் வென்ற பிறகு, இடையில் பதக்கம் வெல்லாத குறையை, இந்த வெண்கலப் பதக்கம் மூலம் இந்தியா போக்கியுள்ளது.

ஜெர்மனி சாம்பியன்

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் 1-1 என சமனில் முடிந்ததால், பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் வென்று ஜெர்மனி அணி 8-வது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை வென்றது.

Story first published: Wednesday, December 10, 2025, 23:30 [IST]
Other articles published on Dec 10, 2025
English summary
Junior Hockey World Cup 2025: India Wins Bronze Medal in Junior Hockey World Cup with Stunning Comeback Against Argentina
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+