Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கி ஜூனியர் உலககோப்பை கோலகல தொடக்கம்.. சென்னையில் சம்பவம் செய்த இந்திய அணி

சென்னை: ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை தொடர் சென்னையில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இந்தப் போட்டிக்கான கோப்பையை தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அப்போது கலை நிகழ்ச்சிகளும், வண்ண மையமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்தது. உலகம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் என ஆறு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.

ரவுண்டு ராபின் முறைப்படி இந்த தொடர் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி காலிறுதுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் பாகிஸ்தான் பங்கு பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஓமன் அணி விளையாட வந்திருக்கிறது.

Junior Hockey World cup 2025

சென்னை மற்றும் மதுரையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இலவசம் என அறிவிக்கப்பட்டதால் சென்னை ரசிகர்கள் பெருமளவு இந்த போட்டியை கண்டு களித்தனர். குறிப்பாக இரவு நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் இந்தியா, சிலி அணிகளுக்கு எதிரான ஆட்டம் பட்டையை கிளப்பியது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஆதிக்கம் செலுத்தியது. இதில் முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பிறகு இந்திய அணி வீரர்கள் கோல் மழையை பொழிந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக ரோஷன் இரண்டு கோல்களை அடித்தார். இதேபோன்று ஓமன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தியது. இதேபோன்று நியூசிலாந்து, சீனா அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக முடிந்தது.

இதில் நியூசிலாந்த அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோன்று மதுரையில் நடைபெற்ற ஆட்டத்திலும் ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி அணி 4 க்கு 0 என்ற கணக்கில் வென்றது. இதேபோன்று எகிப்து,ஸ்பெயின் அணிகள் மோதியது. இதில் ஸ்பெயின் அணி 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பெல்ஜியம் நம்பிபியா அணிகள் மோதிய ஆட்டத்தில் பெல்ஜியம் பட்டையை கிளப்பியது. இதில் மதுரை ரசிகர்களுக்கு கோல் மழையை பெல்ஜியம் வீரர்கள் பொழிந்தனர். இறுதியில் 12க்கு 1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. இந்திய அணி இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் ஓமன் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

Story first published: Saturday, November 29, 2025, 8:35 [IST]
Other articles published on Nov 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+