For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாம் ரெடி.. ஷாருக்கான் வந்தா கறுப்பு மை வீசுவோம்.. பழைய படத்தை வைத்து பிரச்சனை பண்ணும் அமைப்பு

புவனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை துவக்க விழாவிற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வந்தால், அவர் மீது கறுப்பு மை வீசுவோம் என கலிங்கா சேனா என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் ஹாக்கி உலகக்கோப்பை வரும் நவம்பர் 27 முதல் நடைபெற உள்ளது.

இதன் துவக்க விழாவில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.

பழைய படம் தான் காரணம்

பழைய படம் தான் காரணம்

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் ஒடிசா மாநிலத்திற்குள் வந்தால் அவர் மீது கறுப்பு மை வீசுவோம் என கலிங்கா சேனா அமைப்பு கூறியுள்ளது. 2001இல் வெளிவந்த ஷாருக்கான் படத்தை காரணம் காட்டி இந்த அமைப்பு தற்போது ஷாருக்கானுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஒடிசாவுக்குள் வரக்கூடாது

ஒடிசாவுக்குள் வரக்கூடாது

2001இல் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த படம் "அசோகா". அந்த படத்தில் கலிங்கப் போர் நடைபெறும் காட்சிகளில் ஒடிசாவின் பூர்வீக மக்களை இழிவுபடுத்தும் வகையில் அதில் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாகவும், அதனால் ஷாருக்கான் ஒடிசா மாநிலத்திற்குள் வரக்கூடாது எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கலிங்கா சேனா அமைப்பு.

எல்லாம் ரெடியா இருக்கு

எல்லாம் ரெடியா இருக்கு

கலிங்கா சேனா அமைப்பின் நிர்வாகி நிஹார் பானி கூறுகையில், "ஷாருக்கான் மீது கறுப்பு மை வீச அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். அவர் விமான நிலையத்தில் இருந்து போட்டி மைதானத்துக்கு வரும் வரை நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவோம். எங்கள் தொண்டர்கள் சாலைகள் முழுவதும் இருப்பார்கள்" என எச்சரித்தார்.

17 ஆண்டுகள் கழித்து புகார்

17 ஆண்டுகள் கழித்து புகார்

2001இல் வெளிவந்த படத்திற்கு இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதில் ஷாருக்கான் ஒடிசா மாநில மக்களின் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஷாருக்கான் கலந்து கொள்வார்

ஷாருக்கான் கலந்து கொள்வார்

எனினும், இந்த நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் கலந்து கொள்ள உள்ளார் என தெரிகிறது. அவர் மட்டுமின்றி இந்த விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மாதுரி டிக்ஷித் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Story first published: Friday, November 23, 2018, 19:48 [IST]
Other articles published on Nov 23, 2018
English summary
Kalinga Sena plans to throw black ink on Shah Rukh Khan ahead of Hockey world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+