Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை ஹாக்கி.. பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்திய அணி.. 8வது இடத்துடன் ஏமாற்றம்

டெல்லி: 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் அணி ஏமாற்றத்துடன் தனது பயணத்தை முடித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற 7வது இடத்திற்கான போட்டியில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரில் இந்தியாவுக்கு 8வது இடமே கிடைத்தது.

போட்டியின் 6வது நிமிடத்தில் அபிஷேக் அடித்த பந்தை பெல்ஜிய வீரர் ஹெண்ட்ரிக்ஸ் தவறுதலாக தங்கள் வலைக்குள் தள்ள, இந்தியாவுக்கு முதல் கோல் கிடைத்தது. இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ரோமனும், அடுத்த சில விநாடிகளில் ஹியூகோ லேபூச்சரும் கோல் அடித்து பெல்ஜியத்தை முன்னிலை பெறச் செய்தனர்.

Men Hockey World Cup 2026 India Loses to Belgium in Shootout Finishes 8th

இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபாரமாக விளையாடி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டத்தின் போது மன்பிரீத் சிங் காயமடைந்து வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இதன் பின்னர் பெல்ஜியத்தின் ஆர்தர் டி ஸ்லூவர் கோல் அடித்து மீண்டும் தனது அணியை முன்னிலை பெற செய்தார். இருப்பினும், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்த ஆட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 3-3 என சமநிலை வகித்தன.

அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் பெல்ஜியம் 4-3 என்ற கணக்கில் வென்றது. இதில் இந்தியாவின் தில்பிரீத், ஷிலானந்த், அபிஷேக் ஆகியோர் கோல் அடித்த போதும், ஹர்மன்பிரீத், சுக்ஜீத் சிங் ஆகியோர் வாய்ப்பை வீணடித்தனர். பெல்ஜிய கோல்கீப்பர் வானாஷ் இவர்களின் கோல் முயற்சிகளை தடுத்து நிறுத்தினார்.
இந்தத் தோல்வி குறித்து பேசிய இந்திய வீரர் ஹர்திக், வெற்றி பெற வேண்டிய போட்டிகளை கோட்டைவிட்டது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் 55 ஆண்டுகால கனவு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

Story first published: Saturday, August 29, 2026, 8:04 [IST]
Other articles published on Aug 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+