இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் நாப்ஸ் நியமனம்
டெல்லி: இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிறசியாளராக ஆஸ்திதிரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ஜேக் நாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 ஆண்டு காலம் இப்பதவியில் நீடிப்பார்.
இதுவரை இவ்வளவு நீண்ட காலத்திற்கு எந்த இந்தியப் பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டதில்லை என்பதால் நாப்ஸ் நியமனம் பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த ஜோஸ் பிராசா இருந்து வந்தார்.
பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து நாப்ஸ் கூறுகையில், மிகவும் பெருமையாக, கெளரவமாக, மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இவர் 1984ல் லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியில்இடம் பெற்றிருந்த வீரர் ஆவார். 2016 ரியோ டிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிகள் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக நாப்ஸ் செயல்படுவார்.
இவருக்கு மாதம் 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் சம்பளமாக தரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications