Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர்டைம் பார்த்து ஹாக்கி உலகக்கோப்பைக்கு தயாரான ஒடிசா.. எங்க பார்த்தாலும் இலவச வை-ஃபை

புபனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நவம்பர் இறுதியில் தொடங்க உள்ளது.

ஹாக்கி உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்த வேண்டி ஒடிசா மாநிலம் அதிக அக்கறை கொண்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கலிங்கா விளையாட்டு அரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஹாக்கி தொடர்பான கலை அலங்காரங்கள் தூள் பறக்கின்றன.

இலவச இணைய வசதி

இலவச இணைய வசதி

அது மட்டுமின்றி, ஒடிசா நகரின் பெரும்பாலான பகுதிகளில் இலவச வை-ஃபை வசதியும் ஒடிசா அரசால் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டினர் வருகை தருவார்கள் என்பதால் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது.

15,000 இருக்கைகள் வசதி

15,000 இருக்கைகள் வசதி

கலிங்கா விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்பட்டு 15,000 இருக்கைகள் வரை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உலகத்தரம் வாய்ந்த அளவுக்கு அங்கே உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நேரம் உழைத்த ஊழியர்கள்

கூடுதல் நேரம் உழைத்த ஊழியர்கள்

விஐபி பகுதி, வீரர்கள் உடை மாற்றும் அறை, ஊடங்கங்கள் பகுதி, புதிய ஆடுகளம் என ஒடிசா அரசு ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் கடந்த சில மாதங்களாக கூடுதல் நேரம் பணியில் இருந்து இந்த தொடருக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

ஒடிசா விளையாட்டில் முன்னிலை

ஒடிசா விளையாட்டில் முன்னிலை

ஒடிசா அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் சமீப காலமாக முன்னணியில் உள்ளது. அதை தொடர்ந்தே, ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தவும் முன்வந்ததோடு அதை சிறப்பாக நடத்தவும் கடுமையாக உழைத்து வருகிறது. ஹாக்கி ஆடவர் உலகக்கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது.

Story first published: Tuesday, October 30, 2018, 18:53 [IST]
Other articles published on Oct 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+