Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - கடைசி நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் அபார கோல்.. அர்ஜென்டினா எதிரான ஆட்டம் சமனில் முடிவு

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் இந்திய அணி அபாரமாக விளையாடி அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் டிரா செய்தது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணி இம்முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

மொத்தமாக 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே இரு அணிகளும் அபாரமாக விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டத்தின் முதல் பகுதியில் யாருமே கோல் அடிக்கவில்லை.

Olympics 2024 Paris Olympics 2024 india hockey team

இந்த நிலையில் போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடிக்க அதனை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க முடியவில்லை. இதை அடுத்து அர்ஜென்டினா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி கடுமையாக போராடியும் முதல் பாதியில் அர்ஜென்டினாவால் கூட சமன் செய்ய முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதனை அந்த அணி கோலாக மாற்ற தவறியது. இதனை அடுத்து கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஸ் மாற்றப்பட்டார். இது இந்தியா எடுத்த தைரியமான முடிவாக பார்க்கப்பட்டது. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவ போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அவர் கோலாக மாற்ற போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. பி பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களிலும் ஏ பிரிவில் நெதர்லாந்து பிரிட்டன் அணி முதல் இரண்டு இடங்களிலும் இருந்தது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 29, 2024, 18:46 [IST]
Other articles published on Jul 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+