Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பாக். ஹாக்கி அணிக்கு ரூ. 1 கோடி பரிசு

கராச்சி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஙகப் பதக்கம் வென்ற பாகிஸ்தான ஹாக்கி அணிக்கு பஞ்சாப் மாநில முதல்வர் ரூ. 1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் ஹாக்கி அணி 20 வருடம் கழித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இந்த சாதனையை பாராட்டும் வகையில் பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரிப் ஹாக்கி வீரர்களுக்கு லாகூரில் பிரமாண்ட வரவேற்பு அளித்தார். மேலும், அவர்களுக்கு ரூ. 1 கோடி ரொக்கப் பரிசும் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஷரிப் கூறியதாவது,

16 வருடங்களுக்குப் பின் ஹாக்கியில் வெற்றி பெற்றிருப்பதும், 20 வருடங்களுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஙகம் வென்றிருப்பதும் சாதாரண விஷயம் அல்ல.

பல பிரச்சனைகளால் உழலும் பாகிஸ்தானுக்கு இந்த தங்கப் பதக்கம் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. பாகிஸ்தான் ஹாக்கி அணியைப் பற்றி நினைக்கையில் பெருமையாக இருக்கிறது. அவர்கள் பாகிஸ்தானுக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று அவர் வெகுவாக பாராட்டினார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+