Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 8 நாட்களில் 2024 ஒலிம்பிக்.. இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்கங்கள் எத்தனை? ஆதிக்கம் தொடருமா?

சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் இந்திய அணி இதுவரை 8 தங்கப்பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. கடந்த முறை 41 ஆண்டுகளுக்கு பின் பதக்கம் வென்று வரலாறு படைத்த நிலையில், இம்முறை இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பார்க்கலாம்.

33வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடர் பாரிஸ் மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் 16 நகரங்களில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பாக தயாராகி உள்ளனர். ஆசியப் போட்டிகளில் எப்படி பதக்கங்களை வேட்டையாடினார்களோ, அதேபோல் இம்முறை ஒலிம்பிக்கிலும் பதக்க வேட்டையை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

paris olympics 2024 2024

குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவர் அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1928ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ரடாமில் நடந்த ஒலிம்பிக் தொடர் முதல் 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரை மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என்று அசத்தியுள்ளது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பலம்வாய்ந்த ஜெர்மனி அணியை வீழ்த்தி 41 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை கைப்பற்றியது. இதனால் இந்திய ஹாக்கி அணியின் பதக்க வேட்டை நிச்சயம் தொடரும். இந்த ஒலிம்பிக் தொடருக்கான நெதர்லாந்து அணியுடன் நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடி இந்திய அணி தயாராகியுள்ளது. அண்மையில் நடந்த சில போட்டிகளில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் தோல்வியடைந்து இந்திய அணி நல்ல ஃபார்மில் இல்லை.

ஆனால் இந்திய அணி முக்கியமான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இளமையும் அனுபவமும் வாய்ந்த அணியாக இந்திய ஹாக்கி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் அனுபவ கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் 4வது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய ஜாம்பவான் தன்ராஜ் பிள்ளைக்கு பின் 4வது ஒலிம்பிக் தொடரில் விளையாடும் வீரர்கள் ஸ்ரீஜேஷ் மற்றும் மன்ப்ரீத் மட்டும் தான்.

அதேபோல் ஜர்மன்ப்ரீத் சிங், அபிஷேக் உள்ளிட்ட அறிமுக வீரர்களையும் இந்திய ஹாக்கி அணி அழைத்து சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் குரூப் பி-யில் இந்திய அணி பெல்ஜியம், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அயர்லாந்து ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது. இதில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், இந்திய அணியால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 17, 2024, 13:25 [IST]
Other articles published on Jul 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+