Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் ஹாக்கி.. ஜெர்மனியை வீழ்த்திய அர்ஜென்டினா ஆடவர்.. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ரியோ : ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வலுவான ஜெர்மனி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.

பிரேசிலில் நடக்கும் 31வது ஒலிம்பிக் போட்டியில், நேற்ரு ஆடவர்களுக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹாக்கி உலக தரவரிசைப் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள பலம் வாய்ந்த, முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜெர்மனியும், தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதின.

 Rio 2016: Argentina end Germany's hockey reign, reach Olympic final

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் மேலும் ஆட்டம் சூடுபிடித்தது. இதில் இவ்விறு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டனர். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 5- 2 என்ற கோல்கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

1948ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக அர்ஜென்டினா ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Story first published: Wednesday, August 17, 2016, 2:59 [IST]
Other articles published on Aug 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+