ரியோடி ஜெனிரோ: இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் இழந்த பெருமையை மீட்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் அணி பெயரை கேட்டாலே பிற அணிகள் பயப்படும் காலம் இருந்தது. ஒலிம்பிக்கில் மொத்தம் 8 தங்க பதங்கங்களை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்திய அணிக்குதான் உண்டு.
அப்போது, கோலோச்சிய, இந்திய வீரர், மேஜர் தயான் சந்த், ஹாக்கி வரலாற்றில் மிக முக்கிய வீரர் என்று வர்ணிக்கப்படுபவர்.

டாப் அணியாக இருந்த இந்தியா, காலப்போக்கில், ஆவரேஜ் பட்டியலில் சேர்ந்தது. இதனால் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதே கஷ்டமாகி போனது.
ஆனால், தற்போது மீண்டும் இந்திய ஹாக்கி அணி எழுச்சி பெற்று வருகிறது. அதன் ரேங்கிங் உயர்ந்து வருகிறது. இளம் வீரர்களிடம் மனத்தடை அகன்று உத்வேகம் இருக்கிறது.
இந்திய அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் பரட்டு வார்த்தைகளில் அந்த தன்னம்பிக்கை வெளிப்படையாகவே துளிர் விடுகிறது. ஸ்ரீஜேஷ் கூறுகையில், இந்திய அணி வீரர்களுக்கு சமீப காலமாக தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. எந்த ஒரு அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அணிக்கு உள்ளது என்றார்.
நாங்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்பது இந்தியா இழந்த தனது பெருமையை மீட்பதற்கு சமம் என்பதை உணர்ந்துள்ளோம் என்றும் ஸ்ரீஜேஷ் தெவிக்கிறார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் வெற்றியை பார்த்து இளம் தலைமுறைக்கு ஹாக்கி மீது ஆர்வம் வந்து, ஸ்டிக்கை கையில் எடுப்பார்கள் என்கிறார் கேப்டன் ஸ்ரீஜேஷ்.
வாழ்த்துக்கள்!