ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 0-5 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவிடம் படுதோல்வி கண்டது.
குரூப்பில் 'பி'-யில் உள்ள இந்திய அணி. முதலில் ஜப்பானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. இதயடுத்து பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு எதிரான நடந்த ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது.
இந்நிலையில் நேற்று அர்ஜென்டினாவுடன் மோதியது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அர்ஜென்டினா 5-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழத்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடர்ந்து 4-ஆவது தோல்வியை சந்தித்த இந்திய அணி, காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி, "ஏ' பிரிவில் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தையே பிடித்தது.