ஹாக்கி: அர்ஜென்டினாவிடம் இந்தியா தோல்வி
பியூனோஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவுடனான மூன்றாவது ஹாக்கி போட்டியில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்திய ஹாக்கி அணி அர்ஜென்டினாவுக்கு சென்று 4 போட்டியில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அர்ஜென்டினாவின் மாதியாஸ் பரிடஸ் (6வது நிமிடம்), லுகாஸ் விலா (32வது நிமிடம்) தலா 1 கோல் அடித்தனர்.
கடைசி போட்டி நாளை நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications