ஹாக்கி தேசிய விளையாட்டா?.. அரசுக்கு 10 வயது சிறுமி கேள்வி- இல்லை என்கிறது விளையாட்டு துறை!

நம் நாட்டின் தேசிய சின்னங்களை குறித்து புத்தகத்தில் படித்தார் லக்னோவை சேர்ந்த 10 வயது சிறுமி ஐஸ்வர்யா பராஷர். இதில் சந்தேகமடைந்த அவர், இது குறித்து அவரது ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். இறுதியில் தேசிய விலங்கு, தேசிய பறவை, தேசிய பூ, தேசிய விளையாட்டு உட்பட தேசிய சின்னங்கள் அறிவிக்கப்பட்டதற்கான உத்தரவின் சான்றிதழ் நகலை தருமாறு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டு துறை, ஹாக்கி உட்பட எந்த விளையாட்டையும், தேசிய விளையாட்டாக மத்திய அரசு அறிவிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது,
ஹாக்கி நமது தேசிய விளையாட்டு அல்ல. மேலும் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த ஒரு விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications