Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஜர்பைஜானுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட்-இந்திய மகளிர் 'அட்டாக்' வெற்றி!

டெல்லி: அஜர்பைஜான் அணிக்கு எதிராக நடந்த ஹாக்கி தொடரின் 4 போட்டிகளிலும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா, அஜர்பைஜான் பெண்கள் அணிகள் பங்கேற்ற 4 போட்டிகளை கொண்ட ஹாக்கி தொடர் டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 3 போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்திய அணி, எதிரணியை நேற்று நடந்த கடைசிப் போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

அஜர்பைஜான் அணிக்கு ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும், கோல் அடிக்க தவறியது. அதன்பிறகு ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் இந்தியாவின் ஜஸ்பிரீத் கெளர் முதல் கோலை அடித்தார்.

மேலும் 68வது நிமிடத்தில் இந்தியாவின் ராம்பால் மற்றொரு கோலை அடித்தார். இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து விளையாடிய அஜர்பைஜான் அணியினரால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில், அஜர்பைஜானை வீழ்த்தியது. இதனையடுத்து தொடரின் 4 போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது.

Story first published: Friday, January 20, 2012, 16:13 [IST]
Other articles published on Jan 20, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+