Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் பயிற்சி போட்டி: பிரான்ஸை 4-0 கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

London Olympics 2012
பிரான்ஸ்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஹாக்கி பயிற்சிப் போட்டியில் கலந்து வரும் இந்தியா, நேற்றைய போட்டியில் பிரான்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்குகிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றுள்ள ஹாக்கி அணிகள் மற்ற அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி ஹாக்கி தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்ற நெதர்லாந்து அணியினர், லண்டன் சூழ்நிலைக்கு மாறும் வகையிலும் லண்டனில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா ஆகிய அணிகள் ஹாக்கி பயிற்சி போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்த நிலையில் பிரான்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி நேற்று 2வது போட்டியில் அந்நாட்டு அணியுடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட பயிற்சி தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

இதனையடுத்து வரும் 5 முதல் 11ம் தேதி வரை ஸ்பெயின் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள பயிற்சி போட்டிகளில் இந்தியா கலந்து கொள்ள உள்ளது. இதுவரை 8 முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்தியா, இந்த ஆண்டு சிறப்பாக ஆடி வருவதால், இந்த முறை கட்டாயம் பதக்கம் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Story first published: Monday, July 2, 2012, 14:46 [IST]
Other articles published on Jul 2, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+