கராச்சி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், ஹாங்காங்கும் இன்று மோதுகின்றன.
6 ஆசிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது.
முதல் நாளில் நடந்த இரு போட்டிகளில், ஹாங்காங்கை பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸை, வங்கதேசம், 96 ரன்களில் வென்றது.
இன்று இரு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இந்தியாவும், ஹாங்காங்கும் மோதுகின்றன. இன்னொரு போட்டியில், வங்கதேசமும், இலங்கையும் மோதுகின்றன.
கராச்சியில் நடைபெறும் இந்தியா, ஹாங்காங் போட்டி ஒருதரப்பான போட்டியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இருப்பினும் பெரிய ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்த இந்தியா முனையும்.
அதேபோல இலங்கை, வங்கதேச போட்டியும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. இப்போட்டி லாகூரில் பகலிரவுப் போட்டியாக நடைபெறுகிறது.