Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக் 2012 - தகுதிச்சுற்றில் வென்ற இந்திய ஆண்கள் அணி ஹாக்கி அணி தகுதி

India men's hockey team qualified for the London Olympics 2012
டெல்லி: ஒலிம்பிக் போட்டியின் தகுதிச் சுற்றின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை 8-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

வரும் ஜூலை 27ம் தேதி லண்டனில் ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ளது. இதில் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளை தேர்ந்தெடுக்கும் தகுதிச் சுற்று போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் 17வது நிமிடத்திலேயே லக்ரா ஒரு கோல் அடித்து, இந்திய அணியின் கணக்கை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து 19வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதனை பயன்படுத்தி கொண்ட சந்தீப் சிங், 2வது கோலை அடித்தார்.

இந்த நிலையில் 23வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் மார்டின் பிரிசாக், ஒரு கோலை அடித்து பதிலடி கொடுத்தார். 26வது நிமிடத்தில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் கிடைக்க, இந்த முறையும் சந்தீப் சிங், அதனை கோலாக மாற்றினார்.

போட்டியின் முதல் பாதியின் முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலை வகித்தது. போட்டியின் 2வது பாதியில் 38வது நிமிடத்தில் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 43வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடித்தார். 49வது நிமிடத்தில் சந்தீப் சிங் மீண்டும் ஒரு கோல் அடிக்க, 56வது நிமிடத்தில் ரகுநாத்தும் ஒரு அடித்தார்.

ஆனால் பிரான்ஸ் அணியினர் கடுமையாக போராடியும், 2வது பாதியில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முடியில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியா தகுதிப் பெற்றது.

சந்தீப் சிங் - ஆட்டநாயகன்

லண்டன் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் இந்திய அணியின் சந்தீப் சிங், மொத்தம் 16 கோல்கள் அடித்து, இந்தியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற பக்க பலமாக இருந்தார். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்தீப் சிங்கிற்கு, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாக்கிக்கு மவுசு:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில், இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்தியர்கள் இடையே ஹாக்கி போட்டிகளை பார்க்கும் ரசனை அதிகரித்துள்ளது.
Story first published: Monday, February 27, 2012, 13:05 [IST]
Other articles published on Feb 27, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+