Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி இன்று நெதர்லாந்து உடன் மோதுகிறது

Hockey
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி இன்று வெற்றி துவக்கம் காண வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. ஒலிம்பி்க்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் 12 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளன.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், பாகிஸ்தான், அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இந்தியா, நெதர்லாந்து, தென் கொரியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் பி பிரிவில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஆண்களுக்கான ஹாக்கி அணிகள் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி பலமிக்க அணியாக உள்ளது. இந்தியா, தரவரிசையில் 10வது இடத்தில் இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 8 முறை தங்கப்பதக்கம் வென்ற அணி என்பதால் இந்த முறை அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் சிங், இக்னாஸ் டிர்கே ஆகியோர் அணியில் உள்ளனர். மேலும் சுனில், உத்தப்பா, துஷார் கந்தகர், மன்பிரீத் சிங், தனிஸ் முஸ்தபா ஆகியோரும் சிறப்பாக ஆட கூடியவர்கள்.

கடந்த 1968ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நெதர்லாந்தை, இந்தியா வீழ்த்தி உள்ளது. ஆனால் கடந்த 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சர்வதேச அளவில் 3 தொடர்களில் மட்டுமே இந்திய அணி பங்கேற்று உள்ளது.

அதிலும் கடந்த 2006ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு 6வது இடம் கிடைத்தது. கடந்த 2006ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவிற்கு 11வது இடமும், கடந்த 2010 ஆண்டு உலக கோப்பையில் 8வது இடமும் கிடைத்தது.

இந்திய அணியின் தாக்குதல் மற்றும் தடுப்பாட்ட திறமைகளை வெளிப்படுத்தினால் மட்டுமே, நெதர்லாந்து அணியை இன்று எளிதாக வீழ்த்த முடியும்.

ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா-நெதர்லாந்து போட்டியை தவிர, ஏ பிரிவை சேர்ந்த ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின்-பாகிஸ்தான், இங்கிலாந்து-அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன. மேலும் பி பிரிவில் தென் கொரியா-நியூசிலாந்து, ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன.

Story first published: Monday, July 30, 2012, 12:05 [IST]
Other articles published on Jul 30, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+