மகளிர் ஹாக்கி அணிக்கு அதிர்ச்சி அளித்த தென் கொரியா
சியோல்: தென் கொரியாவுக்கு எதிரான 5 போட்டித் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது தென்கொரியா. இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, மூன்றாவது போட்டியில் தோல்வி கிடைத்தது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி, 5 போட்டித் தொடரில் விளையாட தென் கொரியா சென்றுள்ளது. முதல் போட்டியில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கி்ல் வென்று, 2-0 என முன்னிலை பெற்றது.

நேற்று இரவு நடந்த மூன்றாவது ஆட்டத்தில், தொடரை வெல்லும் முனைப்போடு இந்திய மகளிர் அணி களமிறங்கியது. துவக்கத்தில் தென்கொரியாவுக்கு இந்திய மகளிர் ஆட்டம் காட்டினர். ஆனால், சுதாரித்த தென்கொரிய அணி, 12 மற்றும் 14வது நிமிடங்களில் கோலடிக்க, இந்திய அணி ஆட்டங்கண்டது.
அதன்பிறகு, 16வது நிமிடத்தில் கோலடித்து, முன்னிலையை குறைத்தாலும், டிரா செய்யும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.
அதையடுத்து, தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய மகளிர் 2-1 என முன்னிலையில் உள்ளனர்.
இன்று இரவு நான்காவது போட்டி நடக்க உள்ளது.
Story first published: Friday, March 9, 2018, 12:50 [IST]
Other articles published on Mar 9, 2018


Click it and Unblock the Notifications