Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை ஹாக்கி பைனலில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா பெண்கள் அணி கோப்பை வென்றது

ஆம்ஸ்டெல்வீன்: 2026 பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில், நெதர்லாந்தை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. அர்ஜென்டினா அணி தங்களது அபாரமான ஆட்டத்தின் மூலம் பலமான நெதர்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியின் நீண்ட கால ஆதிக்கத்திற்கு அர்ஜென்டினா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி தனது 5வது உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. நெதர்லாந்து அணி சார்பாக இபி ஜான்சென் ஆட்டத்தின் முதல் பாதியில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். இது இந்த தொடரில் அவரது 8வது கோலாகும். தொடர்ந்து போராடிய அர்ஜென்டினா அணிக்கு, 54வது நிமிடத்தில் கேப்டன் மரியா கிரனாட்டோ கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார்.

Women Hockey World Cup 2026 Final Argentina Defeats Netherlands in Shootout to Win Title

இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா 3-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அர்ஜென்டினா தரப்பில் விக்டோரியா கிரனாட்டோ, பிரிசா, சோபியா கெய்ரோ ஆகியோர் கோல் அடித்தனர். நெதர்லாந்து தரப்பில் மரிஜன் மட்டுமே கோல் அடித்தார். பீன் சாண்டர்ஸ், பெலிஸ் ஆல்பர்ஸ் ஆகியோர் தங்களது வாய்ப்புகளைத் தவறவிட்டனர். இதன் மூலம், 9 முறை சாம்பியனான நெதர்லாந்தின் கனவை அர்ஜென்டினா தகர்த்தது.

“இந்தியா உலகக்கோப்பை வெல்ல என்ன செய்யணுமோ..”.. சஞ்சு சாம்சனின் தியாகம்.. நெகிழ்ந்த சூர்யகுமார் யாதவ்

“இந்தியா உலகக்கோப்பை வெல்ல என்ன செய்யணுமோ..”.. சஞ்சு சாம்சனின் தியாகம்.. நெகிழ்ந்த சூர்யகுமார் யாதவ்

முன்னதாக, 2022 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நெதர்லாந்திடம் பெற்ற தோல்விகளுக்கு அர்ஜென்டினா பழிதீர்த்துக் கொண்டுள்ளது. மேலும், இது அர்ஜென்டினா பெண்கள் அணி வெல்லும் 3வது உலகக் கோப்பை ஆகும். இதற்கு முன்பு 2002 மற்றும் 2010ல் அவர்கள் கோப்பையை வென்றிருந்தனர். மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தி பெல்ஜியம் வெண்கலப் பதக்கம் வென்றது.

Story first published: Sunday, August 30, 2026, 8:48 [IST]
Other articles published on Aug 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+