புரோ கபடி லீக் 2019: மீண்டும் அற்புதம் காட்டிய விகாஸ்..! மும்பையை துரத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ்..!
சென்னை : புரோ கபடி லீக்கில், யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் துவங்கப்பட்டது புரோ கபடி லீக். நாட்டின் பல நகரங்களில் நடக்கிறது. நடப்பு சீசன், கடந்த ஜூலை 20ம் தேதி ஐதராபாத்தில் துவங்கியது. தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு செல்லும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

12 நகரங்கள்
மொத்தம் 12 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஐதராபாத், மும்பை, பாட்னா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன.

சென்னையில் தொடக்கம்
அடுத்த கட்டமாக சென்னையில், இந்த போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. வரும் 23ம் தேதிவரை, சென்னையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

வீரர்கள் ஆதிக்கம்
அதில் துவக்கம் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் அசத்தலான ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியது யு மும்பா அணி.

30-27 புள்ளிகள்
கடைசி வரை போராடிய யு மும்பா அணி வீரர்களால் முன்னிலை பெறமுடிய வில்லை. இறுதியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, யு மும்பா அணியை 30 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

பட்டியலில் 5வது இடம்
இந்த வெற்றியின் மூலம் 26 புள்ளிகள் பெற்ற ஹரியானா அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடம் பிடித்தது. யு மும்பா அணி, 24 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications