ஆசிய விளையாட்டு: கபடிப் போட்டி ஆடவர் பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்!

தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பெண்கள் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் இறுதியில் இந்திய பெண்கள் அணி 31-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதேபோல் ஆடவர் பிரிவிலும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஈரானும் மோதின. இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
ஆட்டத்தின் இறுதியில் ஈரான் அணியை 27-25 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இந்தியா மொத்தம் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கிறது. அதுவும் கபடியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலுமே தங்கம் வென்று சாதித்துள்ளது.
இந்திய ஹாக்கி அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications