Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Pro Kabaddi 2019: அந்த ஒத்த புள்ளி… பாட்னாவிடம் வெற்றியை கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்…!!

மும்பை: புரோ கபடி லீக் போட்டியில் 1 புள்ளியில் தமிழ் தலைவாஸ் அணி தோற்றதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புரோ கபடி லீக் 2019 போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த தொடர் ஜூலை 20 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை நடக்கிறது. 2 வாரங்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 2 போட்டிகள் நடைபெற்றது.

Patna pirates beat tamil thalaivas pro kabaddi league 2019

முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் பாட்னா பைரேட்சும் மோதின. விறு விறுப்பான இந்த போட்டியில், வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் அணி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Patna pirates beat tamil thalaivas pro kabaddi league 2019

அதனால் தமிழ் தலைவாஸ் ரசிகர்களை பெரும் அதிருப்தியடைந்தனர். தமிழ் தலைவாஸ் அணி 23 புள்ளிகளையும் பாட்னா அணி 24 புள்ளிகளையும் எடுத்தது. இதனை அடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்கால் அணியும் புனே அணியும் மோதின.

Patna pirates beat tamil thalaivas pro kabaddi league 2019

அதில் பெங்கால் அணியின் ஆதிக்கம் செலுத்தியது. தொடக்கத்தில் இருந்தே அபாரமாக ஆடிய அந்த அணி 43 புள்ளிகளை எடுத்தது. ஆனால் அதனை எதிர்த்து ஆடிய புனேவால் 23 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Patna pirates beat tamil thalaivas pro kabaddi league 2019

இதனையடுத்து பெங்கால் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் டெல்லி அணி 15 புள்ளிகளும் பெங்கால், பாட்னா, மும்பை அணிகள் 11 புள்ளிகளும் பெற்றன.

குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது.

Story first published: Monday, July 29, 2019, 23:52 [IST]
Other articles published on Jul 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+