Pro Kabaddi 2019: யு மும்பாவை துவம்சம் செய்த பிங்க் பாந்தர்ஸ்... ! புனேரி பல்தானை சாய்த்த ஹரியானா
Recommended Video
இந்தூர்: புரோ கபடி 2019 தொடரின் லீக் போட்டியில், பிங்க் பாந்தர்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல, கபடிக்கு என ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் பட்டு வருகிறது புரோ கபடி லீக். இந்தாண்டுக்கான புரோ கபடி லீக் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இன்றைய அட்டவணையின் படி, 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, யு மும்பா அணியும், பிங்க் பாந்தர் அணியும் மோதின. மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் பலப்பரிட்சை நடத்தின.

பிங்க் பாந்தர்ஸ் வெற்றி
யு மும்பா, பிங்க் பாந்தர் அணிகளுக்கிடையேயான போட்டியில் பிங்க் பாந்தர்ஸ் அணி 42 - 23 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி அசத்தியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிங்க் பாந்தர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் யு மும்பா அணி ஒரு கட்டத்தில் திணறியது. முடிவில் பிங்க் பாந்தர்ஸ் வென்றது.

ஹரியானா ஸ்டீலர்ஸ் வென்றது
புனேரி பல்தான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 34 - 24 புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் சம பலத்தில் இருந்ததால் போட்டி கடுமையாக இருந்தது.

புனேரி 24 புள்ளிகள்
ஒரு கட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆதிக்கம் செலுத்தியதால் 34 புள்ளிகள் பெற்றது. புனேரி பல்தான் அணி 24 புள்ளிகள் மட்டுமே எடுத்து 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவின்படி 6 அணிகள், 5 புள்ளிகளை பெற்றிருக்கின்றன.

2 போட்டிகள்
புனே, டெல்லி, பெங்கால், உத்தரபிரதேசம் ஆகிய அணிகள் இன்னும் புள்ளி கணக்கையே தொடங்கவில்லை. நாளையும் 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் உபி யோதாவும், பெங்கால் வாரியர்சும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் தெலுகு டைட்டன்சும், தபாங் டெல்லியும் சந்திக்கின்றன.


Click it and Unblock the Notifications