Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த மண்ணில் தோல்வி அடைந்த புனேரி அணி.. குஜராத், பெங்கால் அபார வெற்றி

புனே : புரோ கபடி லீகில் நேற்றைய நடந்த இரண்டு ஆட்டங்களில் குஜராத் அணி புனேரி பல்தான் அணியையும், பெங்கால் வாரியர்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியையும் வீழ்த்தினர்.

புனேரி அணி நேற்று மிகவும் எளிதாக புள்ளிகளை விட்டுக் கொடுத்தது. குஜராத் அணி புனேரி அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்து இருந்தது.

PKL 2018 - Gujarat FortuneGiants beat Puneri Paltan, Bengal Warriors beat Bengaluru bulls

இதையடுத்து ஆட்ட நேர முடிவில் குஜராத் 45-20 என்ற புள்ளிக்கணக்கில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் பெங்கால் வாரியர் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் மிக நெருக்கமாக புள்ளிகளை பெற்று வந்தன.

ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 23-23 என சம நிலையில் இருந்தன. அப்போது பெங்கால் அணி ஆல்-அவுட் செய்து புள்ளிகள் வித்தியாசத்தை பத்தாக மாற்றியது. பெங்களூரு அணி வெற்றிக்கு போராடியது. எனினும், இறுதியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

புரோ கபடி லீகில் இன்று 8 மணிக்கு துவங்கும் போட்டியில் டெல்லி டபாங் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. 9 மணிக்கு துவங்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன.

Story first published: Friday, November 30, 2018, 15:11 [IST]
Other articles published on Nov 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+