Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரும் பின்னடைவில் இருந்து வெற்றி பெற்ற புனேரி பல்தான்.. புரோ கபடி லீகின் விறுவிறுப்பான போட்டி

புனே : புரோ கபடி லீகில் புதன்கிழமை நடந்த முதல் போட்டியில் புனேரி பல்தான் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை மிக நெருக்கமான வித்தியாசத்தில் 35-33 என வீழ்த்தியது.

புனேரி பல்தான் அணி மூன்றாவது முறையாக ஹரியானா அணியை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

PKL 2018 Puneri Paltan beat Haryana - Bengaluru Bulls beat Telugu titans

ஹரியானா அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. அதிலும் முதல் பாதியில் 22-8 என பெரிய அளவில் முன்னிலையில் இருந்தது ஹரியானா. புனே பெரிய பின்னடைவில் இருந்து மீண்டு வந்து போட்டியை வென்றது. வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றியை ருசித்தது.

அடுத்து நடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி தெலுகு டைடன்ஸ் அணியை 34-26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

பெங்களூரு அணியின் ரோஹித் குமார் 8 ரெய்டு புள்ளிகளும், அமித் 5 டேக்கில் புள்ளிகளும் பெற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

அடுத்து இன்று நடக்கும் போட்டியில் புனேரி பல்தான் அணி, குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணியையும், மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியையும் சந்திக்கிறது.

Story first published: Thursday, November 29, 2018, 8:10 [IST]
Other articles published on Nov 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+