For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 புள்ளிகளில் குஜராத்தை புரட்டிப் போட்ட புனேரி.. ஜெய்ப்பூரை வீழ்த்திய டபாங் டெல்லி!

பாட்னா : 2019 புரோ கபடி லீக் தொடரில் நடந்த இரு போட்டிகளில் புனேரி பல்தான், டபாங் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற முதல் போட்டியில் டபாங் டெல்லி அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. ஜெய்ப்பூர் அணி இந்த சீசனில் தன் முதல் தோல்வியை எதிர் கொண்டது.

PKL 2019 : Dabang Delhi beat Jaipur Pink Panthers ; Puneri Paltan won Gujarat Fortunegiants

மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் அணி சிறிய வித்தியாசத்தில் குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

டபாங் டெல்லி - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டியில் முதல் சில நிமிடங்கள் இரு அணிகளும் டேக்கில் செய்ய முடியாமல் தடுமாறின. அதனால், இரு அணிகளுமே ரெய்டு புள்ளிகளை வேட்டையாடியது.

PKL 2019 : Dabang Delhi beat Jaipur Pink Panthers ; Puneri Paltan won Gujarat Fortunegiants

முதல் பாதியின் முடிவில் டெல்லி அணி 16 - 10 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. அதன் பின் இரண்டாம் பாதியில் தன் முன்னிலையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்ற டெல்லி அணி 35 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. நவீன் குமார் மற்றும் சந்திரன் ரஞ்சித் தங்கள் ரெய்டுகளால் டெல்லி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

PKL 2019 : Dabang Delhi beat Jaipur Pink Panthers ; Puneri Paltan won Gujarat Fortunegiants

இரண்டாம் போட்டியில் புனேரி பல்தான் அணி புரோ கபடி லீக் வரலாற்றில் முதன் முறையாக குஜராத் அணியை வீழ்த்தியது. முந்தைய தினம் நடந்த போட்டியில் வெற்றி பெற்று இருந்த புனேரி அணி, தொடர்ந்து இரண்டாம் நாளும் வெற்றி வாகை சூடியது.

புனேரி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் டிஃபன்ஸ் தான். கிரிஷ் எர்னாக் அபாரமாக தடுப்பாட்டம் ஆடினார். முதல் பாதியில் குஜராத் அணி 17 - 14 என முன்னிலையில் இருந்தது,

PKL 2019 : Dabang Delhi beat Jaipur Pink Panthers ; Puneri Paltan won Gujarat Fortunegiants

எனினும், இரு அணிகளும் தொடர்ந்து நெருக்கமாக புள்ளிகளை பெற்றுக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் புனேரி அணி 2 -3 புள்ளிகள் முன்னிலை பெற்றுக் கொண்டே ஆடியது. அதை அப்படியே தக்க வைத்து இறுதியில் 33 - 31 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, August 5, 2019, 23:58 [IST]
Other articles published on Aug 5, 2019
English summary
PKL 2019 : Dabang Delhi beat Jaipur Pink Panthers ; Puneri Paltan won Gujarat Fortunegiants
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+