Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் 2025.. தொடர்ந்து 6வது வெற்றியை பெற்ற டெல்லி.. போராடி தோற்ற தெலுங்கு டைட்டன்ஸ்

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனில் டபாங் டெல்லி அணி தொடர்ந்து 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் உள் விளையாட்டு அரங்கில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது.

தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டத்தை வலுவாகத் தொடங்கியது, விஜய் மாலிக், ஷுபம் ஷிண்டே, மற்றும் பரத் ஆகியோரின் பங்களிப்புடன் 4-0 என்ற முன்னிலையைப் பெற்றது. அவர்களின் பாதுகாப்பு அரணாக மாறி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், முதல் பாதியில் 14-9 என்ற முன்னிலை பெற உதவியது.

Pro Kabaddi 2025

டெல்லியின் ரெய்டர்கள் டைட்டன்ஸின் கட்டுப்பாட்டை உடைக்க முடியாமல் திணறினர்.ஆனால், இரண்டாவது பாதி வேறு முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. நீரஜ் நர்வால் ஒரு அற்புதமான சூப்பர் ரெய்ட் மூலம் புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தார், பின்னர் டெல்லி ஒரு ஆல் அவுட் மூலம் 20-19 என்ற முன்னிலையைப் பெற்றது. அங்கிருந்து, ஃபாசல் அணியை அற்புதமாக வழிநடத்தினார்.

சௌரப் நந்தலுடன் இணைந்து ஒரு ஹை ஃபைவ் உடன்முடித்தார். இவர்களின் தடுப்பாட்டம் மற்றும் நீரஜின் ஒன்பது ரெய்ட் புள்ளிகள் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன.டைட்டன்ஸ் இறுதியில் போராடி, ஷுபம் ஷிண்டே மற்றும் பிரஃபுல் ஸாவரே மூலம் புள்ளி வித்தியாசத்தை இரண்டு புள்ளிகளாகக் குறைத்தாலும், டெல்லி தனது ஆதிக்கத்தை தக்கவைத்தது.

கடைசி நொடிகளில், அக்ஷித் ஒரு சூப்பர் ரெய்ட் மூலம் முன்னிலையை 33-28 ஆக உயர்த்தி, போட்டியை உறுதி செய்தார்.டைட்டன்ஸின் தீவிரமாக முயற்சி செய்த போதிலும், டெல்லியின் ஆல்-ரவுண்ட் ஆட்டம் மற்றொரு வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியுடன், சீசன் 8 சாம்பியனான டெல்லி தற்போது தோல்வியடையாத பயணத்தைத் தொடர்ந்து, நடப்பு சீசனில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

Story first published: Wednesday, September 17, 2025, 23:45 [IST]
Other articles published on Sep 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+