Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி 2025 புள்ளி பட்டியல்.. தமிழ் தலைவாஸ் சரிவு.. அடுத்த சுற்றுக்கு செல்வது கடினம்

மும்பை: புரோ கபடி லீக் தொடர் தற்போது விறுவிறுப்பான கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் 18 போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த நிலையில் இறுதி கட்ட போட்டிகள் தற்போது லீக் சுற்றில் நடைபெற்று வருகின்றன.

இதில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனே அணிக்கு எதிரான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 40க்கு 31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதுபோன்று பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 29க்கு 21 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

PKL 2025 Points table

இதன் மூலம் புள்ளி பட்டியலில் நடந்திருக்கும் மாற்றங்களை தற்போது பார்க்கலாம். முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் புனே அணி 26 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டெல்லி அணி 24 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தெலுங்கு அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூர் அணி 18 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ஹரியானா அணி 16 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும்,மும்பை அணி 16 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. ஜெய்ப்பூர் அணி 14 புள்ளிகள் ஏழாவது இடத்திலும் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி 17 போட்டிகள் விளையாடி ஆறு வெற்றி 11 தோல்வி என 12 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. up அணி 12 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்தில் உள்ளது. இதில் தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டமே எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். தமிழ் தலைவாஸ் அணி அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பெங்கால் அணியை டெல்லியில் எதிர்கொள்கிறது.

Story first published: Saturday, October 18, 2025, 22:52 [IST]
Other articles published on Oct 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+