Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக்: நம்பர் 1 டீம் முடிஞ்சா அவுட் ஆக்கு.. கெத்து காட்டி ஜெயித்த புனேரி பல்தான்

விசாகப்பட்டினம்: 2025 புரோ கபடி லீக் சீசன் தொடரில் நேற்றிரவு நடந்த விறுவிறுப்பான போட்டியில், புனேரி பல்தான் அணி 43-32 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது புனேரி பல்தான்.

புனே அணியின் வெற்றிக்கு, இளம் ரைடர்களான ஆதித்யா ஷிண்டே மற்றும் பங்கஜ் மோஹிதே ஆகியோரின் அபாரமான 'சூப்பர் 10' புள்ளிகளும், டிஃபெண்டர் கௌரவ் காத்ரியின் 'ஹை 5' புள்ளிகளும் முக்கிய காரணமாக அமைந்தன. யுபி யோத்தாஸ் அணி சார்பில் ககன் கௌடா மீண்டும் ஒரு 'சூப்பர் 10' அடித்து தனி ஆளாகப் போராடினார்.

PKL 2025 Puneri Paltan s Dominance Aditya Shinde Pankaj Mohite Shine in Win Over UP Yoddhas

புனே அணியின் ஆதிக்கம்:

போட்டியின் முதல் புள்ளியை புனேரி பல்தான் அணியின் அஸ்லாம் இனாம்தார் தனது வெற்றிகரமான ரைடு மூலம் பெற்றுத் தந்தார். ஆனால், யுபி யோத்தாஸின் குமன் சிங் ஒரு புள்ளி எடுத்து ஸ்கோரை 1-1 என உடனடியாக சமன் செய்தார். ஆட்டம் சமநிலையில் சென்றுகொண்டிருந்தபோது, பங்கஜ் மோஹிதே தனது மின்னல் வேக ரைடில் ஒரே நேரத்தில் நான்கு புள்ளிகளை அள்ளி வந்து 'சூப்பர் ரைடு' செய்து, புனே அணியை 7-3 என முன்னிலை பெற வைத்தார்.

ஆனால், பங்கஜ் செய்த ஒரு சிறிய தவறால், யுபி யோத்தாஸ் அணி 'சூப்பர் டேக்கிள்' செய்து, புள்ளி வித்தியாசத்தை 6-7 எனக் குறைத்தது. தொடர்ந்து குமன் சிங் மற்றொரு புள்ளி எடுக்க, ஸ்கோர் 7-7 என மீண்டும் சமநிலையை எட்டியது. யுபி யோத்தாஸ் அணி சிறிது நேரம் இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்றாலும், முதல் டைம்-அவுட்டிற்குள் புனேரி பல்தான் மீண்டும் ஸ்கோரை சமன் செய்தது.

முதல் இடைவேளைக்குப் பிறகு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய புனே அணி, தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளைப் பெற்று 12-9 என முன்னிலை பெற்றது. முதல் பாதியின் கடைசி ஏழு நிமிடங்கள் இருந்த நிலையில், யுபி யோத்தாஸ் அணியை 'ஆல் அவுட்' செய்து, புனேரி பல்தான் 16-12 என தனது முன்னிலையை வலுப்படுத்தியது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் புனேரி பல்தான் அணி 21-16 என்ற வலுவான முன்னிலையுடன் சென்றது.

இரண்டாவது பாதியில் முழுமையான வெற்றி:

இரண்டாவது பாதியிலும் புனேரி பல்தான் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. ஒரு சிறப்பான டேக்கிள் மூலம் தங்களது முன்னிலையை அதிகரித்த புனே அணிக்கு, ஆதித்யா ஷிண்டேவின் வெற்றிகரமான ரைடு மேலும் பலம் சேர்த்தது. இதன் விளைவாக, யுபி யோத்தாஸ் அணி மீண்டும் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் புனேரி பல்தான் 27-17 என வலுவான நிலையை எட்டியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆதித்யா ஷிண்டே, தனது 'சூப்பர் 10' புள்ளிகளை நிறைவு செய்தார். ஒருபுறம் ரைடர்கள் புள்ளிகளைக் குவிக்க, மறுபுறம் புனே அணியின் பாதுகாப்பு அரணும் எஃகு கோட்டையாக நின்றது. யுபி யோத்தாஸ் ரைடர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் அவர்களை மடக்கிப் பிடித்தனர். இரண்டாவது பாதி டைம்-அவுட்டின்போது புனேரி பல்தான் 32-21 என்ற வலுவான முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பிறகும் ஆட்டத்தின் போக்கு மாறவில்லை. புனே அணி மளமளவென புள்ளிகளைக் குவித்து, இந்த பாதியில் இரண்டாவது முறையாக யுபி யோத்தாஸை 'ஆல் அவுட்' செய்தது. இதன் மூலம், 37-22 என 15 புள்ளிகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய முன்னிலையை உருவாக்கியது. மற்றொருபுறம், பங்கஜ் மோஹிதேவும் தனது 'சூப்பர் 10' புள்ளிகளை நிறைவு செய்து, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதிவரை ரைடிங் மற்றும் டிஃபென்ஸ் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்தான் அணி, 43 - 32 என்ற புள்ளிக் கணக்கில், 11 புள்ளிகள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது புனேரி பல்தான் அணி.

Story first published: Wednesday, September 10, 2025, 23:54 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+