Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி 2025: ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி.. புள்ளி பட்டியலில் எந்த இடம்?

டெல்லி: புரோ கபடி லீக் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் யுபி யுத்தாஸ் அணியிடம் 32 க்கு 31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால், டெல்லி வீரர்கள் குமன் சிங் மற்றும் ககான் ஆகியோர் அபாரமாக விளையாடி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள்.ஹித்தேஷ் ஹை பை எடுத்ததன் மூலம் தமிழ் தலைவாஸ் வீரர் ரதி எடுத்த ஹை பை வீணானது.

Pro Kabaddi 2025

ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்த நிலையில் உபி வீரர்கள் அபாரமாக விளையாடி தமிழ் தலைவாஸ் அணியை கட்டுப்படுத்தினர். முதல் பகுதி இடைவேளையின் போது தமிழ் தலைவாஸ் அணி 17க்கு 14 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால் அதன் பின்பு இரண்டாவது பகுதியில் உபி யுத்தாஸ் வீரனின் கையே ஓங்கி இருந்தது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்து வந்தனர். ஆட்டத்தின் கடைசி சில நொடிகளில் யூபி யுத்தாஸ் 32 க்கு 31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனிடையே புள்ளி பட்டியலில் புனேரி பால்டான் அணி 24 புள்ளிகளை பெற்று முதல் இடத்திலும், தபாங் டெல்லி அணி 24 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும், பெங்களூர் புல்ஸ் அணி 16 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஹரியானா அணி 14 புள்ளிகள் பெற்று 6வது இடத்திலும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

விளையாடிய 15 போட்டிகளில் ஆறு வெற்றி ஒன்பது தோல்விகளை தமிழ் தலைவாஸ் பெற்றிருக்கிறது. உபி அணி 12 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி ஒன்பதாவது இடத்திலும், குஜராத் அணி பத்தாவது இடத்திலும், பெங்கால் அணி 11வது இடத்திலும் பாட்னா அணி 12 வது இடத்திலும் உள்ளது. முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு மட்டும்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 14, 2025, 23:50 [IST]
Other articles published on Oct 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+