Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக்.. சாம்பியன் பட்டத்தை வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்.. கண்ணீருடன் கொண்டாடிய வீரர்கள்!

புனே: புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வென்று மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது.

புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசனுக்கான இறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து பாட்னா பைரேட்ஸ் அணி விளையாடியது. இதுவரை பாட்னா பைரேட்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், 4வது முறையாக பட்டத்தை வெல்ல தீவிரமாக இருந்தது. அதேபோல் கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி இம்முறை முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

pro kabaddi pro kabbadi 2024 haryana steelers vs patna pirates 2024

இதன்பின் டாஸ் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை ரெய்டு வர அறிவுறுத்தியது. இதனை பயன்படுத்தி கொண்ட ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் புள்ளியை கைப்பற்றியது. இதன்பின் இரு அணிகளும் சரிக்கு சமமாம மோதிய நிலையில், முதல் 10 நிமிடங்களில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முன்னிலையில் இருந்தது.

பாட்னா பைரேட்ஸ் அணியின் தேவாங்கை ஹரியானா அணி வீரர்கள் தொடர்ச்சியாக வீழ்த்தி கொண்டே இருந்தனர். இதனால் அந்த அணியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிந்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 15-12 என்ற கணக்கில் முன்னிலையை தக்க வைத்து கொண்டது. தொடர்ந்து 2வது பாதியிலும் ஹரியானா அணியின் கைகள் ஆட்டத்தில் ஓங்கியிருந்தது.

பாட்னா பைரேட்ஸ் அணியின் தேவாங்க் 4 முறை ரெய்டு சென்று 4 முறையும் ஒரு புள்ளிகளை எடுக்க முடியாமல் வீழ்த்தப்பட்டார். கடைசி 10 நிமிடங்கள் இருந்த போது, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு டூ ஆர் டை ரெய்டு அளிக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி வினய் 2 புள்ளிகளை கைப்பற்ற, பாட்னா பைரேட்ஸ் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்து அசத்தியது.

இதனால் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 26-17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் கடைசி 5 நிமிடங்கள் இருந்த போதே ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள் நேரத்தை கடத்தும் யுக்தியை பயன்படுத்த தொடங்கினர். அதேபோல் டிஃபென்ஸிலும் கூட்டாக செல்லக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தனர். இறுதியாக 32-23 புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை சாதனை படைத்துள்ளது.

கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் புனேரி பல்தான்ஸ் அணியிடம் 28-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு மருந்தளிக்கும் வகையில் 11வது சீசனில் வென்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெற்றியால் ஹரியானா அணியின் பயிற்சியாளர் மன்ப்ரீத் நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தி கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, December 29, 2024, 21:06 [IST]
Other articles published on Dec 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+