Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற டெல்லி அணி.. பைனலில் புனேவை எளிதில் வென்றது

டெல்லி: புரோ கபடி 12வது சீசனில் சாம்பியன் பட்டத்தை டெல்லி டபாங் அணி வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அணி புரோ கபடி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடந்த எட்டாவது சீசனின் போது டெல்லி அணியின் கேப்டனாக ஜோகிந்தர் நர்வால் கோப்பையை வென்றார்.

தற்போது டெல்லி அணியின் பயிற்சியாளராக அவர் பணிபுரிந்து வருகிறார். இதன் மூலம் வீரராகவும் பயிற்சியாளராகவும் புரோ கபடி தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டபாங் டெல்லி அணியும் புனேரி பால்தான் அணியும் பல பரிட்சை நடத்தியது.

PKL Season 12

இதில் 31க்கு 28 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை டெல்லி அணிக்கு கிடைத்திருக்கிறது. 12 சீசன் வரலாற்றில் வெறும் இரண்டாவது சீசனில் மட்டும்தான் சொந்த மண்ணில் விளையாடி மும்பை அணி கோப்பையை வென்றது.

அதன் பின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் ஒரு அணி வென்றிருக்கிறது. டெல்லி அணியில் நீரஜ் நர்வால் 8 புள்ளிகளையும், அஜிங்யா 6 புள்ளிகளையும் கைப்பற்றிய நிலையில் புனேரி பால்டான் அணியில் ஆதித்யா சிண்டே சூப்பர் 10 மற்றும் அபினேஷ் நடராஜன் 4 புள்ளிகள் பெற்றது வீணானது.

ஆரம்பம் முதலில் இருந்தே டெல்லி அணியின் கை ஓங்கி இருந்தது. எனினும் புனேரி பல்தான் அணி அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு நெருக்கடி கொடுத்தது. எனினும் தனது அனுபவ ஆட்டத்தை பயன்படுத்திய அஜிங்யா டெல்லி அணிக்கு புள்ளிகளை வாரி கொடுத்தார். இதன் மூலம் முதல் பாதியில் இறுதியில் புனேரி பால்தான் அணி ஆல் அவுட் ஆனது.

இதனால் முதல் பாதியில் 20 க்கு 14 என்ற கணக்கில் டெல்லி அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் தொடக்கத்திலும் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தி புள்ளிகள் வித்தியாசத்தை அதிகப்படுத்தியது. எனினும் புனேரி பல்தான் அணியின் குர்தீப் அபாரமாக இரண்டு டேக்கல்களை செய்ய புள்ளிகள் வித்தியாசம் நான்காக குறைந்தது.எனினும் டெல்லி அணியை சுதாரித்துக் கொண்டு ஒரு சூப்பர் டேக்கிலை செய்ய புள்ளிகள் வித்தியாசம் ஆறாக மாறியது.

இரண்டாவது பாதியில் இறுதியில் ஆதித்யா ஷிண்டே ஒரு ஆல் அவுட் செய்ய இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் வெறும் மூன்றாக குறைந்தது.எனினும் டெல்லி அணியின் நீரஜ் நர்வால் தனது அசத்தலான ரெயிடு மூலம் புள்ளிகளை பெற இறுதிக்கட்டத்தில் பாசில் இறுதிப் போட்டியில் தனது முதல் புள்ளியை பெற டெல்லி அணி 31 க்கு 28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Story first published: Friday, October 31, 2025, 23:33 [IST]
Other articles published on Oct 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+