Pro Kabaddi 2024 -புரோ கபடி லீக் ஏலத்தில் தமிழக வீரர்களின் மவுசு அதிகரிப்பு! எந்த அணியில் எந்த வீரர்
மும்பை : புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இதில் மொத்தமாக 118 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். புரோ கபடி தொடர் வரலாற்றில் அதிகபட்சமாக எட்டு வீரர்கள் ஒரு கோடி ரூபாய் மேல் ஏலத்தில் சென்று இருக்கிறார்கள்.
முதல் நாள் ஏலத்தில் முக்கியமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நான் ஏலத்தில் அணியை கட்டமைக்கும் முயற்சியில் பன்னிரண்டு அணிகளும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நடப்பு ஏலத்தில் தமிழக கபடி வீரர்களுக்கு மவுஸ் அதிகரித்து இருக்கிறது.

எந்த அணி எந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். தமிழக வீரர் அஜித் குமாரை அதிகபட்சமாக 66 லட்சம் ரூபாய் கொடுத்து புனே அணி தேர்வு செய்திருக்கிறது. இதன் மூலம் அதிக விலைக்கு சென்ற தமிழக கபடி வீரர் என்ற பெருமையை நடப்பு சீசனில் அஜித் குமார் பெற்றிருக்கிறார்.
இதேபோன்று தமிழகத்தில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரரான தரணிதரன் 13 லட்சம் ரூபாய்க்கு ஜெய்ப்பூர் அணி ஏலத்திற்கு எடுத்து இருக்கிறது. இதேபோன்று தடுப்பாட்டத்தில் ஈடுபடும் தமிழக வீரர் பாபுவை 13 லட்சம் ரூபாய்க்கு பாட்னா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தமிழகத்தின் சிறந்த வீரரான சதீஷ்குமாரை 13 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியிருக்கிறது.
இதேபோன்று தமிழகத்தில் துடிப்பான வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஸ்டுவர்ட்டை 14 புள்ளி இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோன்று தமிழகத்தை சென்ற மற்றொரு இளம் நட்சத்திர வீரரான தனசேகரை மும்பை அணி ஒன்பது லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது.
இதேபோன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கபடி வீரரை 9 லட்சம் ரூபாய் கொடுத்து ஹரியானா அணி வாங்கியிருக்கின்றது. இதே போன்று தமிழகத்தில் ஐசிஎப் அணிக்காக விளையாடிய தியாகராஜனை 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்னா அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. இப்படி தமிழக வீரர்கள் பலரும் பிரோ கபடி தொடரில் அதிக விலைக்கு சென்று இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications