For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோ கபடி 2024 - புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ்க்கு எந்த இடம்? புனே, உபி அபார வெற்றி

ஐதராபாத் : புரோ கபடி 2024 ஆம் ஆண்டு சீசனில் ஹைதராபாத்தில் இன்று ஏழாவது மற்றும் எட்டாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இன்று மாலை முதலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், உபி அணியும் டெல்லி அணியும் பல பரிட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உபி அணி 28 புள்ளிகளை பெற்று வெற்றியைப் பெற டெல்லி அணி 23 புள்ளிகள் பெற்று 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதை அடுத்து இரவு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் புனேவும், பாட்னா அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய புனே அணி 15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே அணி 40 புள்ளிகளும் பாட்னா அணி 25 புள்ளிகளும் மட்டுமே பெற்றது.

pkl 2024 pro kabaddi 2024 2024

இதன் மூலம் புள்ளி பட்டியலில் என்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். தற்போது அனைத்து அணிகளும் விளையாடிய நிலையில் புனே அணி 10 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும், ஜெய்ப்பூர் அணி 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், உபி அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

குஜராத் அணி 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 5 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், பெங்கால் அணி ஒரு புள்ளியுடன் எட்டாவது இடத்திலும் பெங்களூர் அணி ஒரு புள்ளியுடன் ஒன்பதாவது இடத்திலும் மும்பை அணி புள்ளிகள் எதுவும் இன்றி, பத்தாவது இடத்திலும் ஹரியானா அணி புள்ளிகள் எதுவும் இன்றி 11-வது இடத்திலும் பாட்னா அணி புள்ளிகள் எதுவும் இன்றி 12-வது இடத்தில் இருக்கிறது.

அக்டோபர் 22ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இரவு 8 மணிக்கு தெலுங்கு அணியும் ஜெய்ப்பூர் அணியும் மோதுகிறது. இரவு 9 மணிக்கு உபி அணியும், பெங்களூர் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தை நாளை அக்டோபர் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு புனே அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் பார்க்கலாம்.

Story first published: Monday, October 21, 2024, 23:44 [IST]
Other articles published on Oct 21, 2024
English summary
Pro Kabaddi 2024 match results - Today schedule and points table புரோ கபடி 2024 - புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ்க்கு எந்த இடம்? புனே, உபி அபார வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+