ஐதராபாத் : புரோ கபடி லீக் தொடரில் 11-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பெங்களூர் புல்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.அன்று இரவு மும்பை அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
இந்த தொடர் தற்போது மூன்று நகரங்களில் நடைபெறுகிறது. அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து நவம்பர் 9ஆம் தேதி வரை ஹைதராபாத்திலும், நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 1ஆம் தேதி வரை நொய்டாவிலும், டிசம்பர் மூன்றில் இருந்து டிசம்பர் 24ஆம் தேதி வரை புனேவிலும் இந்த தொடர் நடைபெறுகிறது.

லீக் சுற்று அட்டவணை தான் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளே ஆப் மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டி இரவு 8:00 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி மோதும் போட்டிகளில் விவரத்தை தற்போது பார்க்கலாம். தமிழ் தலைவாஸ் தங்களுடைய முதல் போட்டியை அக்டோபர் 19ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறும். இதனை அடுத்து அக்டோபர் 23ஆம் தேதி இரவு 9 மணிக்கு புனே அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதுகிறது. அக்டோபர் 25ஆம் தேதி இரவு 8 மணிக்கு தமிழ் தலைவாஸ் அணியும் பாட்னா பைரேட்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.
அக்டோபர் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் அணி உடன் தமிழ் தலைவாஸ் மோதுகிறது. அக்டோபர் 30ஆம் தேதி குஜராத் அணியுடன் தமிழ் தலைவாஸ் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் நான்காம் தேதி பெங்களூர் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி இரவு 8 மணிக்கு விளையாடுகிறது. இதனை தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மீண்டும் தமிழ் தலைவாஸ் பல பரிட்சை நடத்துகிறது.
நவம்பர் 8ஆம் தேதி டெல்லி அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதனை அடுத்து நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து நொய்டாவில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் நவம்பர் 14ஆம் தேதி மும்பை அணியுடன் தமிழ் தலைவாஸ் மோதுகிறது. நம்பர் 16ஆம் தேதி பெங்கால் அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ் நவம்பர் 17ஆம் தேதி ஹரியானா அணியை எதிர்கொள்கிறது.
இதனை அடுத்து நவம்பர் 22ஆம் தேதி உபி அணியுடன் தமிழ் தலைவாஸ் விளையாடுகிறது. நவம்பர் 26 ஆம் தேதி மீண்டும் உபி அணியுடன் தமிழ் தலைவாஸ் விளையாடுகிறது. நவம்பர் 29ஆம் தேதி ஹரியானா அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ் டிசம்பர் ஒன்றாம் தேதி டெல்லி அணியுடன் பல பரிசை நடத்துகிறது. இதனை அடுத்து டிசம்பர் 3ஆம் தேதி முதல் புனேவில் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் தமிழ் தலைவாஸ் அணி டிசம்பர் 6ஆம் தேதி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. டிசம்பர் 11ஆம் தேதி மும்பையை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ் டிசம்பர் 13ஆம் தேதி பாட்னாவை பலப்பரீட்சை நடத்துகிறது. டிசம்பர் 15ஆம் தேதி ஜெய்ப்பூர் அணியுடன் விளையாடும் தமிழ் தலைவாஸ், டிசம்பர் 18ஆம் தேதி பெங்கால் அணியை எதிர்கொள்கிறது.
மீண்டும் டிசம்பர் 22ஆம் தேதி பெங்களூருடன் மோதும் தமிழ் தலைவாஸ் டிசம்பர் 23ஆம் தேதி புனே அணி உடன் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பிலும் கண்டு களிக்கலாம்.