சென்னை : புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் வெற்றியுடன் ஆரம்பித்து புள்ளி பட்டியலில் டாப் மூன்று இடத்தில் இருந்த நிலையில், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் புள்ளி பட்டியலில் சரிவை கண்டு இருக்கிறது.
இதுவரை தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி, ஆறு தோல்வி ஒரு சமன் என 28 புள்ளிகளை பெற்றிருக்கிறது. தற்போது தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம்.

ஹரியானா அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி மூன்று தோல்வி என 41 புள்ளிகள் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 11 போட்டியில் விளையாடி ஏழு வெற்றி, மூன்று தோல்வி ஒரு சமன் என 39 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஜெய்ப்பூர் அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி மூன்று தோல்வி ஒரு போட்டியில் சமன் என 35 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
புனே அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மூன்று தோல்வி, 2 போட்டியில் சமன் என 34 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. பாட்னா அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, நான்கு தோல்வி என 33 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என 32 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்தில் உள்ளது.
தெலுங்கு அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, நான்கு தோல்வி என 32 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி ஆறு தோல்வி என 28 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும், உ.பி அணி 9 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி ஐந்து தோல்வி என 25 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
பெங்கால் அணி 10 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி ஐந்து தோல்வி என 23 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும், பெங்களூர் அணி 11 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி ஒன்பது தோல்வி என 14 புள்ளிகளுடன் 11 இடத்திலும், குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி எட்டு தோல்வி என 12 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றது. ப்ளே ஆப்க்கு தகுதி பெற புள்ளி பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடிக்க வேண்டும். இந்த சூழலில் தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முன்னேற முடியும்.