Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி - ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வி.. சச்சின் அபார சாதனை.. புள்ளி பட்டியல்

ஐதராபாத் : புரோ கபடி 11 வது சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் சச்சின் அபாரமாக விளையாடி 17 புள்ளிகள் பெற்றார்.

இதன் மூலம் புரோ கபடி வரலாற்றில் ஆயிரம் ரெய்டு புள்ளிகளை பெற்று சச்சின் புதிய சாதனையை படைத்தார். இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே இரு வீரர்களும் மாற்றி மாற்றி புள்ளிகளை பெற்று அசத்தினர்.

pkl 2024 pro kabaddi 2024 tamil thalaivas

இன்னும் தெலுங்கு அணியின் பவன் செராவத் அபாரமாக செயல்பட்டு தமிழ் தலைவாஸ் அணியை ஆலஅவுட் ஆக்கியதன் மூலம் தெலுங்கு அணி நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து சச்சின் மீண்டும் ஒரு சூப்பர் ரைடு மேற்கொண்டு இரண்டு புள்ளிகளை பெற்றார். முதல் 20 நிமிடத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 20- 17 என்ற புள்ளிகள் பெற்றிருந்தது.

இதன் அடுத்து இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் அபாரமாக விளையாடி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட் ஆக்கினார்கள். இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் அன்கிட் சச்சினை சூப்பர் டாக்கில் செய்து இரண்டு புள்ளிகளை பெற 34 க்கு 35 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் புனே அணி 29 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மும்பை அணி 24 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் 21 புள்ளிகள் உடனும் இருக்கின்றது. ஜெய்ப்பூர், உபி அணி தலா 19 புள்ளிகள் உடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றது.

பாட்னா மற்றும் பெங்கால் அணி முறையை ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் தலா 17 புள்ளிகளுடன் இருக்கிறது. ஹரியானா அணி 16 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும் தபாங் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், பெங்களூர் அணி 12 புள்ளிகளுடன் 11 வது இடத்திலும், குஜராத் அணி 7 புள்ளிகளுடன் 12வது இடத்திலும் உள்ளது. நாளை வெள்ளிக்கிழமை தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணியுடன் இரவு 9 மணிக்கு பல பரிட்சை நடத்துகிறது.

Story first published: Thursday, November 7, 2024, 13:36 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+