Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Pro Kabaddi: 7வது தோல்வி.. மரண அடி வாங்கிய தமிழ் தலைவாஸ்.. 4 முறை ஆல் அவுட் செய்த யுபி யோதாஸ் அணி!

நொய்டா: புரோ கபடி லீக் தொடரில் யுபி யோதாஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 24-40 என்ற புள்ளிகள் கணக்கில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

11வது புரோ கபடி லீக் தொடரின் 6வது வார போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து யுபி யோதாஸ் அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருந்தால், இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற வேண்டிய தேவையுடன் விளையாடியது.

pro kabaddi pro kabbadi 2024 tamil thalaivas sachin

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சரிக்கு சமமாம போட்டியிட 13-13 என்ற புள்ளிகள் கணக்கில் முடிவுக்கு வந்தது. பின்னர் நடந்த 2வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி மோசமாக விளையாடியது. போனஸ் பாய்ண்ட்ஸ், ரெய்டு, டேக்குள் என்று யுபி யோதாஸ் அணிக்கு புள்ளிகளை வாரி வழங்கினர். அதுமட்டுமல்லாமல் 4 முறை ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

இதன் காரணமாக யுபி யோதாஸ் அணி 40-24 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அடையும் 7வது தோல்வி இதுவாகும். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் 4 வெற்றி, 7 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 28 புள்ளிகள் பெற்று 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றே பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் களத்திலேயே உற்சாகமின்றி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் விளையாடாமல், ஒவ்வொரு முறையும் பதற்றத்தில் தோல்வியை சந்தித்தது வருவதை இந்த சீசனிலும் தொடர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Friday, November 22, 2024, 22:37 [IST]
Other articles published on Nov 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+