Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் 2024 - பெயருக்கு மட்டும் தான் தமிழ் தலைவாஸ்.. ஆனால் மொத்தமே 2 தமிழர் தான்!

சென்னை : புரோ கபடி 2024 ஆம் ஆண்டு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் இரண்டு வீரர்களை மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு அளிக்காமல் அணி நிர்வாகம் நடந்து கொள்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் கபடி போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் புரோ கபடி தொடர் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 11-வது சீசனின் ஏலம் அண்மையில் மும்பையில் நடைபெற்றது.

pro kabaddi 2024 auction Tamil thalaivas

கபடியில் தமிழகம் எப்போதுமே கிங் ஆக விளங்கும். தமிழக கபடி வீரர்கள் சர்வதேச அளவில் பல பெயர்களை பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தை மையமாக கொண்டு செயல்படும் தமிழ் தலைவாஸ் என்ற அணி வெறும் இரண்டு தமிழக வீரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.ராம்குமார் மாயாண்டி, அபிஷேக் என்ற இரண்டு வீரர்கள் மட்டும்தான்.

தமிழக அணியில் விளையாடுகிறார்கள். ஆனால் யூ மும்பை அணியில் அதிகபட்சமாக 5 தமிழக வீரர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். இதேபோன்று புனே அணியில் நான்கு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புரோ கபடி தொடரில் அதிகபட்சமாக ஹரியானாவில் இருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து 22 வீரர்கள் தான் புரோ கபடி தொடரில் விளையாடுகிறார்கள்.

இதற்கு காரணம் பல்வேறு அணியின் பயிற்சியாளர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் தங்களது சொந்த ஊர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக பல அணிகளில் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழ் தலைவாஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டு வெறும் இரண்டு தமிழக வீரர்கள் மட்டும் வாய்ப்பு வழங்கப்படுவது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் தமிழ் தலைவாஸ் என்ற பெயரை மாற்றி ஹிந்தி தலைவாஸ் என வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்கள் சாடி இருக்கிறார்கள். மேலும் சிலர் மும்பை அணியில் தான் அதிக தமிழர்கள் இருப்பதால் தாங்கள் அந்த அணிக்கு தான் ஆதரவு அளிக்க போகிறோம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.ஐபிஎல் தொடரில் எப்படி சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட இல்லையோ, அதேபோன்ற பாணியில் கபடியிலும் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, August 27, 2024, 9:17 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+